மரக்கறி, தேங்காய், தேயிலை, கறுவா உள்ளிட்ட பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் கலப்பு உரங்களின் விலை 50 வீதத்தால் குறைந்துள்ளது என்று கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஜகத் பெரேரா விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்துள்ளார்.
நெல் மற்றும் சோளப் பயிர்களுக்கு அரசாங்கத்தின் உரத் திட்டத்தின் கீழ் இரசாயன உரங்கள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும், ஏனைய பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் உரங்கள் கிடைக்காதமை தொடர்பில் விவசாயிகள் விவசாய அமைச்சுக்கு தொடர்ந்து முறைப்பாடு செய்து வருகின்றனர்.
அந்த விடயங்களை கருத்தில் கொண்டு நெல் மற்றும் சோளம் தவிர்ந்த ஏனைய பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடிய கலப்பு உரத்தை தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களின் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.