கனடாவில் கடந்த 2022 ஆண்டில் மோசடி தொலைபேசி அழைப்புக்களின் ஊடாக அல்பர்ட்டா மக்கள் 5.4 மில்லியன் டொலர்கள் பணத்தை இழக்கநேரிட்டுள்ளது.

இது கடந்த 2020ம் ஆண்டை விடவும் இரட்டிப்பு மடங்கு அதிகளவு பண இழப்பாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டில் போலி தொலைபேசி அழைப்புக்கள் வாயிலாக 849 பேர் மோசடிக்கு உள்ளாகியுள்ளனர் என்பதுடன் 5.4 மில்லியன் டொலர் பணம் இழக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் சிரேஸ்ட பிரஜைகளே இந்த மோசடிகளில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளனர்.

உறவினர்கள் பற்றிய போலித் தகவல்களை வழங்கி அவர்களுக்கு அவசரம் எனக் கூறி பணம் பெற்றுக் கொள்ளல் அல்லது வாடிக்கையாளர் சேவை என்ற அடிப்படையில் மோசடிகளில் ஈடுபடல் என பல வழிகளில் இவ்வாறு பண மோசடிகள் இடம்பெற்றுள்ளன.

இவ்வாறான அவசர அழைப்புக்கள் குறித்துமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுது;தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *