கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளன.

ஆரசாங்கத்தின் புதிய வரி விதிப்பு உள்ளிட்ட பல காரணங்களுசக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதேவேளை, இன்று (15) 10 அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்றைய தினத்தை (15) பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள் , மின்சார பொறியியலாளர்கள், வங்கி சேவை ஊழியர்கள், பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள், வீதி அபிவிருத்தி , கல்வி நிர்வாகம் , நில அளவை திணைக்களம் , வருமான வரி உள்ளிட்ட 47 தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர் பணிப்பகிஷ்கரிப்பில் பங்கேற்கவுள்ளனர்.

முயைற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி திருத்தப்பட வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.

மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து பல அரச அனுசரணை பெற்ற தொழிற்சங்கத்தினரும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வங்கி வட்டி வீதத்தை குறைத்தல், 25,000 ரூபாவிற்கு வாழ்க்கைச் செலவு நிவாரணத்தை வழங்குதல், மின்சாரக் கட்டணத்தை குறைத்தல், ஓய்வூதியக் குறைப்பை உடனடியாக நிறுத்துதல் உள்ளிட்டவை இவர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
அதிபர், ஆசிரியர், தாதியர், சுகாதாரச் சேவை, தபால், அரச முகாமைத்துவ சேவைகள், சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

என்றாலும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டால் உரிய வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *