நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சின் ஊடாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பன இணைந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான முன்னோடி காப்புறுதி திட்டமான “SLIC ஜீவன சக்தி” அறிமுக நிகழ்வு இ.தொ.கா பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான்  தலைமையில் இன்று (04.09.2023) மிகவும் பிரமாண்டமான முறையில் ஹில்டன் கிரேன்டில் நடைபெற்றது.

“SLIC ஜீவன சக்தி” என்பது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுள் மற்றும் சுகாதார காப்புறுதி திட்டமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இது பயனுள்ள திட்டமாக அமையும்.

நிகழ்வில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர மற்றும் மேலதிக செயலாளர்கள், அதிகாரிகள், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் உட்பட அதிகாரிகள், வீரசேகரி ஊடக குழுமத்தின் பணிப்பாளர் குமார் நடேசன், பெருந்தோட்ட கம்பனிகளுடைய முகாமைத்துவ பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிகள், முகாமைத்துவ மேலாளர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் உட்பட பலர் முக்கியஸ்தர்கள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *