தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது மகனான ஜேசன் சஞ்சய் வெளிநாடுகளில் சினிமா தொடர்பான படிப்பை படித்தவர்.

ஏற்கனவே குறும்படங்கள் சில இயக்கியுள்ளார். தனது தந்தையுடன் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் ஆடி உள்ளார்.

தாத்தா, அப்பாவை போல் இவருக்கும் சினிமா மீது ஆர்வம் அதிகம்.

இந்த நிலையில் அப்பா விஜய்யை போல் கதாநாயகனாக களமிறங்காமல் தாத்தா எஸ்.ஏ.சந்திரசேகர் போல் இயக்குனராக ஜேசன் சஞ்சய் களமிறங்குகிறார்.

இவர் இயக்கும் முதல் திரைப்படத்தை லைகா புரெடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் லைகாவின் நிறுவனர் சுபாஸ்கரன் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *