மலலயாளத்தில் முன்னணி டிவி நடிகைகளில் ஒருவரான அபர்ணா நாயர் நேற்று வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரபல மலையாள நடிகை மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் முன்னணி டிவி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் அபர்ணா நாயர். திருவனந்தபுரத்தின் கரம்னா பகுதியில் உள்ள வீட்டில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அபர்ணா பி நாயர் வசித்து வந்தார். கடந்த 2005-ம் ஆண்டு மாயூகம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆன அபர்ணா நாயர், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

 

31 வயதான அபர்ணா நோட்புக், நிவேத்யம், மேகதீர்த்தம், எதுவும் நடக்கும், காக்டெய்ல், மேமா நிலவு, காயம், அழகு, ரன் பேபி ரன், ஒரு குட்டி சோத்யம், அமைதி, நொடிகள், தெருவிளக்கு, பாலன் வக்கீல், கல்கி, தாமர, ஒருத்தி, உணர்தல் உள்ளிட்ட ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். சந்தன மழை, மைதிலி வீண்டும் வரும் மற்றும் தேவஸ்பர்ஷம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் போலீசாருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. எனினும், நடிகை அபர்ணாவுடன் தொடர்புடையவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *