கனடாவின் நயகரா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சென் கதரீன்ஸ் பகுதியில் வெடிப்புச் சம்பவத்துடன் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாரியளவிலான தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெரும் எண்ணிக்கையிலான தீயணைப்புப் படையினர் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென் கதரீன்ஸின் ஹாவுல்கே மற்றும் கீபீர் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் பெற்றுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வீடுகளிலிலேயே தங்கியிருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதி கடுமையான புகை மண்டலமாக காணப்படுவதனால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தீ விபத்து இடம்பெற்ற கட்டிடத்திற்கு அருகாமையில் இருந்த வீடுகள் கட்டிடங்கள் என்பனவற்றில் இருந்தவர்களை பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *