சிரியா எல்லையை ஒட்டிய தென்கிழக்கு துருக்கியில் ஒரு பரந்த பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் முதலில் ஏற்பட்டது.

7.8 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி 4:17 மணிக்கு காஸியான்டெப் நகருக்கு அருகில் 17.9 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ் ஆகிய துருக்கி நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

துருக்கி வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

துருக்கியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி போட்டு உள்ளது.

இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில், துருக்கியில் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட துருக்கியின் காஜியான்டெப் கோட்டை சக்திவாந்த நிலநடுக்கத்தால் தரைமட்டமானது.

ரோமானியர்கள் மற்றும் பைசண்டைன்கள் பயன்படுத்திய பண்டைய கோட்டை துருக்கி பூகம்பத்தில் நிலைகுலைந்து போனது.

தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின்படி, காஜியான்டெப் கோட்டை இரண்டாம் மற்றும் மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமானிய காலத்தில் முதன்முதலில் ஒரு காவல்கோபுரமாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *