வடமேற்கு இங்கிலாந்திலுள்ள கவுன்டஸ் செஸ்டா் மகப்பேற்று வைத்தியசாலையில் கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் லூசி லெட்பி எனும் 33 வயதுடைய செவிலியப் பெண் பணியாற்றினார்.

இவர் கடமையிலிருந்த காலகட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேற்றுப் பிரிவில் சிசுக்கள் உயிரிழப்பது, திடீா் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து வந்துள்ளன.

வைத்தியசாலையில் சிசு மரணங்கள் திடீரென அதிகரித்தது தொடா்பாக பொலிஸாா் கடந்த 2017-ஆம் ஆண்டில் விசாரணையைத் தொடங்கினா்.

விசாரணையின் படி குறித்த பெண் செவிலியர் 07 சிசுக்களை கொலை செய்துள்ளதாகவும் 06 சிசுக்களை கொலை செய்ய முயற்சித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்த விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்ட போது சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவக் குறிப்பேடுகளை லூசி லெட்பியின் இல்லத்திலிருந்து பறிமுதல் பொலிஸார் பரிமுதல் செய்திருந்தனர்.

இதன்போது அவற்றில் ‘நான் ஒரு பாவி’, ‘இந்த சிசுக்களின் இறப்புகளுக்கு நான்தான் காரணம்’ என்பது போன்ற வாசகங்களை அவா் எழுதியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கில் லூசி லெட்பி கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டாா். இது தொடபாக நடைபெற்று வந்த வழக்கின் இறுதித் தீா்ப்பை தற்போது வெளியிடவுள்ள நீதிபதிகள், லூசி லெட்பி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரபூர்வமாக நீரூபிக்கப்ட்டுள்ளது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு லெட்பி மறுப்புத் தெரிவித்துள்ளார் .

அத்தோடு அவா் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், “லூசி லெட்பி ஒரு அப்பாவி” என்றும், தாழ்வு மனப்பான்மை கொண்ட அவா் சிசுக்கள் மரணத்தை தாங்க முடியாமல் குற்ற உணா்ச்சியில் அந்தக் குறிப்புகளை தனக்குத் தானாக எழுதியிருந்ததாகவும் கூறினாா். அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துள்ளனர்.

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *