தான் கதை கேட்டு படம் பண்ணுவது கிடையாது,  என  நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். 

திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்து இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகி உள்ள லக்கிமேன் திரைப்படம் வரும் செப்.1-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் யோகி பாபு,  வீரா, அப்துல், நடிகைகள் ரெய்ச்சல் ரெபீகா, சுஹாசினி குமரன்,  இசையமைப்பாளர் சான் ரோல்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் யோகி பாபு மேடையில் பேசுகையில்,..

லக்கி மேன் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. என்ன சொல்வது.. இயக்குநர் சொன்ன மாதிரி, ஆரம்ப காலத்தில் வாய்ப்பு தேடும் போது இல்லாத அதிர்ஷ்டம். நாம் எல்லோரும் வாழ்க்கைல கஷ்டப்பட்டு தான் வர்றோம்.

ஷூட்டிங் வேலை போகாமல் கொழுத்து வேலைக்கா நான் செல்கிறேன்? சிறிய கதாபாத்திரத்தில் நடித்த என்னை போஸ்டர் எல்லாம் போட்டு ஏன் முன்னணி கதாபாத்திரமாக காட்டுகிறீர்கள் என்று கேட்டால், என்னை negative ஆக காட்டி விடுகிறார்கள்.நான் கதை கேட்டு படம் பண்ணுவது கிடையாது. அவர்களின் கஷ்டத்தை கேட்டு படம் பண்ணுகிறேன். கடைசி வரை அப்படித்தான் இருப்பேன். அதனால் நிறைய இயக்குநர்கள் உருவாகி இருக்கிறார்கள்.

இயக்குனர் பாலாஜி வேணுகோபால் கதை சொல்லும் போது இருந்தது தான். கடைசி விவசாயி படத்தில் நானும் நடித்திருந்தேன். எல்லாரும் நன்றி. ரொம்ப சந்தோஷம் என்றும் கூறினார். தனது நண்பனாக நடித்த அப்துலுக்கு நன்றி.

 

நிகழ்ச்சியில்  இயக்குநர் பாலாஜி வேணுகோபால் மேடையில் பேசியதாவது:-

“நான் வாழ முக்கிய காரணம் எனது மொழி. அதனுடைய அழகை எப்படியெல்லாம் காட்ட வேண்டுமோ அதை தான் காட்டியிருக்கிறேன். இந்த படத்துக்கு ஆங்கிலத்தில் டைட்டில் வைத்தாலும், உண்மையில் இரண்டு டைட்டில் ( முருகன் சார்ந்து ) வைத்திருந்தோம். இந்த படத்தை பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டவர், என்னுடைய முதல் வேலை, முதல் சம்பளம் என்றால் அது ஊடகம் கொடுத்த சாப்பாடு தான் எனவும் கூறினார்.

இந்த கதைக்கு மற்றொரு முக்கிய பங்கு கார்க்கி பவா. யோகி பாபுவை எப்போது பார்க்க போனாலும் ஜீராவை கொடுத்து விடுவார் என்றும், யோகி பாபு தமிழ் நடிகர் என்பதை விட இந்திய நடிகர் என்றே சொல்லலாம். உலக அளவிலான படத்தில் நடிக்ககூடிய திறமையானவர்.

முக்கியமான ஷீட்டிங். ஆனால் அவருக்கு திடீரென அவசர வேலை. ( மெடிக்கல் எமர்ஜென்சி) போக வேண்டிய கட்டாயம். அவர் ஷீட்டிங்கில் இருந்து போய் விட்டு மீண்டும் நாங்கள் எதிர்பார்க்காத தருணத்தில் மீண்டும் ஷீட்டிங்க்கு வந்து, நடித்து கொடுத்தார். ஷீட்டிங் கெடக்கூடாது என்று நினைக்கும் நடிகர் யோகி பாபு என்றும் கூறினார்.

என்னை மாதிரி இன்னும் சில இயக்குனர்கள் மனது வைத்தால் தமிழ்நாட்டில் அடுத்த பகத் பாசில் மாதிரி வீரா வர முடியும். அவர் வாழ்க்கையை அனுகும் விதம் ரொம்ப நன்றாக இருக்கும் என்றும் பாராட்டினார்.

கடைசி விவசாயி படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த மாதிரியான படங்களுக்கு விருது கிடைக்கும் போது தான் அந்த நடிகர்கள், கலைஞர்கள் வெளியே தெரிகிறார்கள். அந்த படத்துக்கு டிசைன் பண்ண சபா தான் இந்த படத்துக்கும் டிசைன் பண்ணிருக்கார். யோகி பாபுவையும், என்னையும் சேர்த்தது முருகன் தான். காரணம் இரண்டு பேரும் முருக பக்தர்கள் எனவும் தெரிவித்தார். அத்துடன் நான் இருந்து எங்கள் அப்பாவை வாழ வைக்கிறேன் என்று கண்கலங்கினார். அப்பா இல்லாத குறை தெரியாமல் என்னை வளர்த்து எங்கள் அம்மா தான்”, என்றார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *