நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரம்

Share

Share

Share

Share

துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது.

சிரியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இரவில் 6 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் துருக்கி, சிரிய எல்லையை அண்டியுள்ள பகுதிகளில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கட்டிட குவியல்களை தோண்டத் தோண்ட சடலங்களாக மீட்கப்பட்டு வருவதாக மீட்புக் குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இரு நாடுகளிலும் பெரும் அழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தை கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியில் மட்டும் 17,674 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,377 ஆக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவுக்கு ஏராளமான நாடுகள் உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டச் சென்ற துருக்கி ஜனாதிபதி எர்டோகனுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மீட்பு பணிகள் மெதுவாக நடைபெறுவதை ஏற்றுகொண்டுள்ள ஜனாதிபதி, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற இயற்கை பேரிடர் காலத்தில், ஒற்றுமை தேவை என்றும், மக்களிடையே எதிர்மறை பிரசாரம் செய்ய வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து...
இலங்கை அணிக்கு 20% அபராதம்
“அனைவரும் சீனர்கள்”
ஐ.நா சனத்தொகை நிதியம் பாராட்டு
காங்கோ குடியரசில் சுரங்க இடிபாடுகளில் சிக்கிய...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
நு/சென்கிளையார் தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய...
ஒரு வருடத்துக்கும் மேலாக இயங்கா முன்பள்ளிகளது...
அரிசி நிவாரணம் பெருந் தோட்ட மக்களுக்கும்...
இரண்டு மாதங்களில் பசுமைப் பொருளாதாரக் கொள்கை