பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை​ 13 ஆக அதிகரித்துள்ளது.

100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைப்பகுதியை ஒட்டியுள்ள ஜுர்ம் நகரை மையமாகக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட நிலநடுக்கம், பாகிஸ்தானின் கைபர் பக்துவான் மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகியுள்ளது.

இரு நாடுகளிலும் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலியாகியுள்ளனர்.

100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *