சிரியாவில், நில நடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டான்.
ஜேன்ட்ரிஸ் நகரில், தரைமட்டமான 5 மாடி கட்டிடத்தின் இடிபாடு குவியல்களுக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மோஸ் என்ற அந்த சிறுவனின் குடும்பத்தினர் அனைவரும் உயிரிழந்த நிலையில், தாய், தந்தையரைத் தேடி அவன் கதறியழுத காட்சிகள் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.