அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அடுத்த தலைமுறை உருவாக்கும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அதாவது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுளே மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளன.
மேற்படி மூன்று நாடுகளும் இணைந்து உருவாக்கிய OAKS ஒப்பந்தத்தின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து இந்த மூன்று நாடுகளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் தாக்கத்திற்கு எதிராக தாக்குதல் திறன்களை வளர்க்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.