( நூரளை பி. எஸ். மணியம்)
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட “புதிய வாழ்கை வீடமைப்பு திட்டத்தின்” வீடுகளுக்கு நீர் வசதியை வழங்குமுகமாக நேற்று  (27) நீர் வழங்கும் செயற்திட்டத்தின் ஆரம்பகட்ட பணிகள் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் , இ.தொ.கா வின் தவிசாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் தலைமையில்  மஸ்கெலியா கிளெணுகி , பொகவந்தலாவை ,கெம்பியன் மற்றும் ரொப்கில் போர்டைஸ் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இ.தொ.கா வின் தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கனகராஜ், உப தலைவர் பிலீப் குமார் ,  மஸ்கெலியா ,நோர்வூட் ,கொட்டக்கலை ஆகிய பிரதேச சபைகளின்  முன்னாள்  தலைவர்களான திருமதி கோவிந்தன் செண்பகவள்ளி , ரவி குழந்தைவேல் , ராஜமணி பிரசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *