நுவரெலியாவில் இரத்ததான முகாம்

Share

Share

Share

Share

நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் ஏற்பாட்டில் “உதிரம் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

நுவரெலியா கல்வி வலயத்தின் நுவரெலியா பரிசுத்த திருத்துவ கல்லூரியின் எற்பாட்டிலும், நுவரெலியா ரோட்ரிக் கழக அனுசரனையுடன், கல்லூரியின் அதிபர் ரவிச்சந்திரன் தலைமையில் இந்த இரத்த தான முகாம் பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று (24)  நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர்,  வைத்தியசாலை இரத்த வங்கி  பிரிவு  தாதிய உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை மாணவ, மாணவிகள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இரத்த தான நிகழ்வில் பெருமளவானவர்கள், குருதிக்கொடை செய்திருந்திருந்தனர். இதன்போது கொடையாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டமையும்  குறிப்பிடதக்கது.

(அந்துவன்)

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு