( நூரளை பி.எஸ். மணியம்)
நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த விசேட தேவையுடைய முப்பது பேர் தமது சுயதொழிலை மேம்படுத்த கோரியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உபகரணங்கள் இன்று (25)
வெள்ளிக்கிழமை  வழங்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இவ் வைபவத்தின் போது நுவரெலியா மற்றும் கொத்மலை பிரதேச செயலகங்களில் வசிக்கும் விசேட தேவையுடைய சுயதொழில் செய்பவர்களுக்கான சுயதொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள் என்பன வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் விசேட அம்சமாக எந்தவித நிதி வரம்பும் இல்லாமல் இங்கு வழங்கப்பட்ட பொதி பெட்டியில் உணவு உற்பத்தி, ஜவுளி விற்பனை, கால்நடை வளர்ப்பு, ஆடைத் தொழில், சிறு வணிகம், பால் உற்பத்தியை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சுயதொழிலை மேம்படுத்தும் வகையில் சுமார் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
9
” லீட்ஸ் சிறுவர் அபிவிருத்தி நிறுவகத்தின் “அனுசரணையுடன் நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் கொத்மலை பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றது.
 இந்த நிகழ்வில்  லீட்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் மன்ரோ, நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட  உட்பட உத்தியோகத்தர்கள்  மற்றும் பயனாளிகளின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *