அமெரிக்காவின் நாஷ்வில் நகரிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
28 வயதான துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 03 பிள்ளைகளும் 03 பாடசாலை ஊழியர்களும் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பான மேலதிக விசாரணை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதைதொடர்ந்து சிறு வணிக நிர்வாக மகளிர் வணிக உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது.
பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் சரியானவை அல்ல. சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகளை ஆராய்ந்து வருகிறோம்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் இருந்து இரண்டு தாக்குதல் ஆயுதங்கள் மற்றும் ஒரு கைத்துப்பாக்கி, இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, ஆயுதத் தாக்குதல் தடையை நிறைவேற்ற மீண்டும் அழைப்புவிடுகிறேன். அரசு இன்னும் சில முன்னேற்றங்களைச் செய்யத் தொடங்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு அவர் கூறினார்.