நேற்று நடந்த போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ்

Share

Share

Share

Share

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மகளிர் முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது.

இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஹேலி மேத்யூஸ் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் தீப்தி சர்மா அபாரமாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் 96 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஜெமிமா 42 ரன்கள் ,கேப்டன் ஹர்மன்ப்ரீதி கவுர் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த வெற்றியால் வியாழன் அன்று நடைபெறும் முத்தரப்புப் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளன.

 

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்