ஆசிய கிண்ணத்திற்கான இரண்டாவது போட்டி பல்வேகலயில் இன்று நடைப்பெற்றது.

இலங்கை பங்களாதேஷ் அணிகளுகிடையிலான இன்றைய சர்வதேச ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணித்தலைவர் சகிப் ஹல் ஹசன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.  பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 164 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

முதலில் ஆடுகளம் நுழைந்த பங்களாதேஷ் அணி   அதிகளவு ஓட்டங்களை பெற நினைத்த போதிலும் மஹேஸ பத்திரனவின் துல்லியமான பந்தை எதிர்நோக்க முடியாமல தடுமாறினார்கள்.

அவர் 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

 நஜ்முல் உசேன் சான்டோவின் நிதான ஆட்டம்.

பங்களாதேஷ் அணி வீரர்களின் விக்கெட்டுகள் ஒரு பக்கம். வீழ்ந்த போதிலும் சான்டோ தனிமனிதனாக நிதானமாக ஆடி 89 ஓட்டங்களை எடுத்தார்

அவரை தவிற வேறு யாரும் பிரகாசிக்கவில்லை.

வெற்றி இலக்கான 165 ஓட்டங்களை இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து பெற்றது.

சரித்த அஸலங்க – சதீர சமரவிக்ரம ஜோடி 

இலங்கை அணி 3  விக்கெட்டுகளை 43 ஓட்டங்கள் பெற்ற போது இழந்தது. நான்காவது விக்கெட்டுக்காக சதீரவுடன் ஜோடி சேர்ந்து ஓட்ட எண்ணிக்கையை 121 வரை கொண்டு சென்றனர்.

அஸலங்க அணியின் வெற்றிவரை இருந்து ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்கள் எடுத்தார்.

ஸ்கோர் விபரம்

பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்கள் ( சான்டோ 89 ஓட்டங்கள் பந்துவீச்சில் பத்திரன 4 விக்கெட்டுகள் தீக்ஸன 2 விக்கெட்டுகள்.

இலங்கை அணி 39 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்கள் ( அஸலங்க  62 ஓட்டங்கள் ஆ.இ, சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்கள்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *