பசறை பத்தாம் கட்டையில் புதிதாக திறக்கப்படவிருந்த மதுபான சாலை வடிவேல் சுரேஷின்  தொடர் அழுத்தத்தினால் இடைநிறுத்தப்பட்டது
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த  வடிவேல் சுரேஷ் MP
மலையகப் பெருந்தோட்டங்களை குறிவைத்து அதிகளவிலான மதுபான சாலைகள் திறக்கப்படுகின்றது
பணம் தின்னும் முதலைகளின் சூழ்ச்சி மலையக சமூகத்திற்கு அச்சுறுதலாகவும் சமூக சீர்கேட்டிற்கும் வித்திடுகின்றது.
மலையகப் பெருந்தோட்டங்களில் பாடசாலை நூலகம் மலசலக்கூடம் நீர் வசதி என பல அபிவிருத்தி வேலை திட்டங்களை அத்தியாவசியமாக
இருந்த போதிலும் அவற்றைக் கண்டு கொள்ளாது மதுபான சாலைகள் திறக்கப்படுவதற்கு இலகுவாக அனுமதி கிடைக்கின்றது.
பசறை பத்தாம் கட்டையில் இவ்வாறு புதிதாக ஆரம்பிக்கப்படுகின்ற மதுபான சாலைக்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தோம் அதற்கு பலனாக அவ்விடத்தில் திறக்கப்படவிருந்த மதுபான சாலை மூடு விழா கண்டது .
பெருந்தோட்ட மக்களின் அமைதியான வாழ்க்கையை சீர்குலைக்க தோட்டங்களுக்குள் மதுபான சாலை அமைக்கப்பட்டால் அதற்கு எதிராக பாரிய போராட்டம் வெடிக்கும் என்பதனை மக்களின் பணத்தை சுரண்ட காத்திருக்கும் பணம் தின்னி முதலைகள் தெரிந்து கொள்ளட்டும்.  என கூறியதாக அவரது அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *