பசறை 13 ஆம் கட்டையில் வயோதிபரின் சடலம் மீட்பு!

Share

Share

Share

Share

ராமு தனராஜா

 

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13 ஆம் கட்டை லுணுபிஸ்ஸபதன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (27 ஆம் திகதி) மாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் வீட்டில் தனியாக வசித்து வந்த 71 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நபர் ஒருவரின் வீட்டுக்கு நீர் வராததால் மரணித்த நபரின் வீட்டுக்கு மேலே உள்ள நீர் ஊற்றில் இருந்து வரும் நீர் குழாயை திருத்துவதற்கு சென்ற போது வீட்டுக்கு வெளியே காய்கறிகள் மற்றும் ஊதுவர்த்தி பக்கற்று ஒன்றும், மரணித்த நபரின் செருப்பு, மூக்குக் கண்ணாடி,தொப்பி, கையடக்கத் தொலைபேசியின் பின் பகுதி ஆகியன வீட்டுக்கு வெளியே கிடந்ததை அவதானித்த நபர் சந்தேகம் கொண்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்ற போது குறித்த நபர் கட்டிலில் மேற்சட்டை இன்றி கிடப்பதை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து குறித்த நபர் பசறை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசியினூடக அறிவித்துள்ளார்.

இதன்போது உடன் ஸ்தானத்திற்கு விரைந்த பசறை பொலிஸார்
பரிசோதித்த போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த நபர் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

நீதவான் பார்வையிடுவதற்காக சடலம் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...
முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!
அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட...
மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம்...