மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, ஆசிரியர் ஒருவர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுமுந்தன்வெளி பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் குறித்த பகுதிக்கு ஆசிரியரொருவருடன் இன்று பிற்பகல் சென்றிருந்தனர்.
இதன்போது, 3 மாணவர்களுடன் படகு ஒன்றில் பயணித்த சந்தர்ப்பத்தில், அந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், அதில் பயணித்த மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களை காப்பாற்ற முயற்சித்த ஆசிரியரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தநிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணியை பிரதேச மக்களுடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.