கனடாவில் சொத்து கொள்வனவு செய்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஓர் மகிழ்ச்சியாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கனடாவில் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட அல்லது பணி அனுமதிப்பத்திரம் உடைய வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடியர் அல்லாதவர்களும் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும்
சொத்து ஒன்றை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அவ்வாறானவர்களின் பணி அனுமதிப்பத்திரம் காலாவதியாக குறைந்தபட்சம் 183 நாட்கள் மீதமிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடியர் அல்லாதவர்கள், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களினாலும் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.