பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், கையிருப்பை மறைத்து வைத்தல் மற்றும் விற்பனை செய்ய மறுத்தமை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பில் கிட்டத்தட்ட 1500 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்தச் சுற்றிவளைப்புகளுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் சில தினங்களில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பண்டிகைக் காலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் முட்டை விற்பனையில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தரமற்ற எடை மற்றும் அளவீட்டு உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அளவீட்டு அலகு, நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அதன் பணிப்பாளர் சுஜீவ அக்குரந்திலக்க தெரிவித்தார்.

இதன்படி, எடை மற்றும் அளவிடும் கருவிகளின் தரம் குறித்து 011 218 22 53 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என சுஜீவ அக்குரந்திலக்க குறிப்பிட்டார்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *