திருப்பூர் பல்லடத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 பேரின் சடலங்களை பொறுப்பேற்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
முதலில் உடல்களை பெற ஒப்புதல் தெரிவித்த உறவினர்கள், தற்போது மறுப்பு தெரிவித்துள்ளனர்.
உடல்களை வாங்க வேண்டாம் என
உறவினர்களிடம் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.
BJP members and villagers of Kallakinaru to which the 4 murder victims of a family belonged stage a road blockade in front of #Palladam Government Hospital in #Tiruppur assailing State Govt for the deteriorated law and order situation.
– reports R Krishnamoorthy @THChennai pic.twitter.com/nYko39SoBw— R Aishwaryaa (@AishRavi64) September 4, 2023
மருத்துவமனை வளாகத்தில் பாஜகவினர் மறியல் காரணமாக வளாகத்தின் வெளிப்புற கதவு பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வீட்டின் அருகே மது அருந்திய நபரை தட்டிக்கேட்டபோது அரிவாளினால் 2 பெண்கள் உட்பட 4 பேர் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதலமைசுசர் மு.க ஸ்டாலின் அறிவிததுள்ளார்.
இந்த சம்பவத்தை தமிழக அரசியல் வன்மையாக கண்டித்து வருகின்றனர்