பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கனடாவில் விபத்து

Share

Share

Share

Share

கனடாவின் இட்டாபிகொக் பகுதியின் 427ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கனடாவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் பாரிய விபத்துச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் இதுவரையில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய ஒர் வாகனம் குடை சாய்ந்து தீப்பற்றிக் கொண்டதாக றொரன்டோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலேயே இந்த விபத்தில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துச் சம்பவம் காரணமாக குறித்த வீதி சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்