இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92). வயது மூப்பால் கடந்த சில காலமாகவே சினிமாவில் இருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார். ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவில் காலமானார்.
அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பழம்பெரும் இயக்குனர் கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மறைவு வருத்தமளிக்கிறது. சினிமா உலகில் தனெக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கி கொண்டவர், படைப்பாற்றல் மிக்க இயக்குநர், பன்முகத் திறமை கொண்டவர் கே.விஸ்வநாத்.
பல்வேறு கருப்பொருள்களில் அவரது படங்கள் பல தசாப்தங்களாக மக்களை மகிழ்வித்தன. இன்று அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.