ரமழான் நோன்பு கடைப்பிடித்துவரும் பாகிஸ்தானின் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
தற்போது ரமழான் நோன்பு கடைபிடிக்கப்படு வருவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கிராம் கோதுமை மாவு வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
இந்த நிலையில், அண்மையில் பெஷாவர் நகரில் இலவச கோதுமை மாவை விநியோகம் செய்வதற்காக அதிகாரிகள் லொறியில் எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த இலவச கோதுமையைப் பெறுவதற்கு நூற்றுக்கணக்கான மக்கள் முண்டியடித்துள்ளனர். இதனால் அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.