ஜனாதிபதி நன்றி

Share

Share

Share

Share

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம்,  ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் பாரிய சீர்திருத்தங்களை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளதாக இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இலங்கையை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னர் கடன் வழங்குநர் குழுவுடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு கடன் நிபந்தனைகள் தொடர்பிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதில் தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் இணக்கம் காணப்பட்ட நிபந்தனைகளுக்கு அமைய,  உத்தியோகபூர்வ கடன் வழங்குநர், வர்த்தக கடன் வழங்குநர் அல்லது கடன் வழங்குநர் குழுவுடன் கடன் உடன்படிக்கைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட மாட்டாது என  ஜனாதிபதி கூறியுள்ளார்.

கடன் வழங்குநருக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்கும் நோக்கில், இலங்கை எந்தவொரு கடன் வழங்குநருடனும் இடைக்கால உடன்படிக்கையில் ஈடுபடவில்லை எனவும் ஜனாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்