இருளப்பன் ஜெகநாதன்
சுயாதீன ஊடகவியலாளர் 

பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் பிரபாகரன் என்று ஒருவர் உருவாகியிருக்கமாட்டார். இன்று 13ஆம் திருத்தத்தை பிக்குமார்கள் அன்றும் ரோஸ்மேட் பிளேஸில் உள்ள பண்டாரநாயக்கவின் இல்லத்தின் முன்பு சென்று அதனை கிழித்து எரியும் படி கட்டாயப்படுத்தினார்.
அதன் பின்னர் பண்டாரநாயகவும் அதனை அவர்கள் முன்னிலையில் எரித்து இதனை தான் முன்னெடுப்பதில்லை என்று பௌத்த பிக்குகளுக்கு வாக்குறுதி அளித்தார்.

என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார்.

ஸ்ரீ இலங்கை சுதந்திர கட்சியின் ஊடக சந்திப்பிலேயே முன்னாள் ஜனாதிபதி இக்கருத்தை பகிரங்கமாக கூறி இருந்தார். 13 ஆம் திருத்தச்சட்டம் பற்றிய வினாக்களை ஊடகவியலாளர்கள் எழுப்பிய போது தொடர்ந்தும் விளக்கம் அளித்த முன்னாள் ஜனாதிபதி

பண்டாரநாயக்க சிங்கள மொழியை அரச மொழியாக்கியமை குறித்து இன்றும் பல விமர்சனங்கள் உள்ளன. சிங்கள மொழியை அரச மொழியாக்கியமையோடு தமிழ் மற்றும் ஆங்கில மொழியை தேசிய மொழி யாக்கினார் . இதன் விளைவாக வடக்கின் அரசியல் தலைவர்களுக்கு அது பெரும் அதிருப்தியை அளித்தது. அதனை தீர்ப்பதற்காகவே இந்த பண்டா செல்வா ஒப்பந்தம் உருவாகியது.

1965 ஆட்சிக்கு வந்த டட்லி சேனாநாயக்கவும் செல்வாநாயகத்தோடு இணைந்து அதே போன்று ஒரு ஒப்பந்தத்தை தயாரித்து செயல்படுத்த முற்பட்ட வேளையில் மகா சங்கத்தினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் விளைவாய் அந்த ஒப்பந்தமும் கைவிடப்பட்டது.

எவர் மூலமாயினும் இந்த இப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்து இருந்தால் 30 வருடத்துக்கு மேலான இந்த கொடூர யுத்தம் உட்பட்டு இருக்காது. மேலும் ஸ்ரீமாவோ அவர்களின் காலத்தில் சர்வதேச உறவுகள் எமக்கு மிகச்சிறந்த நிலையில் இருந்து வந்தது. உலகின் அனைத்து நாடுகளும் எமது அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கி வந்தன. அச்சந்தர்ப்பத்தில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் இன்று ஒரு சுபீட்சமான இலங்கையை நாம் கண்டிருக்கலாம் என கூறினார்.

தற்போது நாடளாவிய ரீதியில் பேசும் பொருளாய் மீண்டும் சூடு பிடித்துள்ள 13 ஆம் திருத்த சட்டம் – பௌத்த பேரினவாத குழுக்களின் எதிர்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக மாக சங்கத்தினர் காணி அதிகாரம் வழங்குவது – மாகாண சபைகளுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்குவது பிரச்சனைகளை தோற்று விக்கும் என ஆசி பெறுவதற்கு சென்ற ஜனாதிபதி ரணில் விசக்ரம்சிங்ஹாவிடம் நேரடியாகவே கூறியிருந்தமையும் நினைவு கூற தக்கது.

அண்மையில் பிக்குமார் குழுவொன்று பொது வெளியில் 13 ஆம் திருத்த சட்டத்தை தீயிட்டு கொளுத்தியமை
அதிகாரப்பகிர்வுக்கு பிக்குமாரின் நிலைப்பாடு பல ஆண்டுகள் கடந்தும் மாறாமல் இருப்பது உறுதியாகிறது.

இந்த நிலையில் தான் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பௌத்த பிக்குமார்களின் இந்த கடும்போக்கு நிலைப்பாடு பற்றி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து சிறுபான்மை காட்சிகளையும் -சிறுபான்மை மக்களையும் கவர்வதற்காக பேசப்பட்டதா இல்லை வரலாற்று தவறை சரி செய்து கொள்ளவேண்டும் என்ற இதய சுத்தியோடு சொல்லப்பட்ட செய்தியா என்பதை மக்கள் தான் யூகிக்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *