இங்கிலாந்தின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பென் வாலேஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான (Energy Security and Net Zero) செயலாளராக இருந்த கிராண்ட் சாப்ஸ் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து பிரதமர் ரிஷி சுனக்கின் மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கிளேர் கோடின்ஹோ(38), தற்போது இங்கிலாந்தின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரஷியா-உக்ரைன் போர் காரணமாக இங்கிலாந்தில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கிளேர் கோடின்ஹோவின் பதவி மிகவும் சவால் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து கிளேர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான மாநில செயலாளராக நியமிக்கப்பட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நமது எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், குடும்பங்களுக்கான கட்டணங்களை குறைக்கவும், தூய்மையான, மலிவான, உள்நாட்டு எரிசக்தியை உருவாக்கவும் பிரதமருடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *