பிரான்ஸில் இன்று தொழிலாளர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
எனினும் இந்த ஆர்ப்பாட்டத்தினால் போக்குவரத்துக்கள் பெருமளவில் பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல் து பிரான்சுக்குள் பொது போக்குவரத்துக்கள் கிட்டத்தட்ட வழமை போன்றே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொழிற்சங்கம் தரப்பில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்படாமல், ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஒய்வூதிய சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர உள்ளார். அதில் தற்போது 62 ஆக உள்ள ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளார்.
இந்த அதிகரிப்புக்கு கண்டனம் தெரிவித்தே நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்திருந்தன. அதன் தொடர்ச்சியாக வியாழக்கிழமையும் ஆ