பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் நாடுகள், வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறும் தமது வருடாந்த மாநாட்டில் புதிய நிதி உடன்படிக்கை கலந்துரையாடப்படவுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் யுத்தம் மற்றும் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளினால் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் ரஷ்யா இந்த புதிய நிதிப் பிரிவை உருவாக்கியதன் பின்னணியில் இருப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பொருளாதார தடைக்கு உள்ளான ரஷ்யா, அமெரிக்க டொலருக்கு பதிலாக சீனாவின் யுவான் நாணயத்தை பயன்படுத்தி வர்த்தகம் செய்து வருவதாக புளூம்பெர்க் இணையதளம் வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, ​​ரஷ்யா, ஆசிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு தேவையான ஆதரவை சீன பணம் வழங்கும் என ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *