பிரித்தானியாவுக்கு விடுமுறைக்காக வந்த கனேடியர் ஒருவர் கொள்ளையர்கள் சிலரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட செத்துப் பிழைத்த அவருக்கு 65 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளதாக அவரது காதலி தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3ஆம் திகதி, கனடாவின் ரொரன்றோவைச் சேர்ந்த Ben Finlan, விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இங்கிலாந்திலுள்ள லண்டனுக்கு வந்திருந்தார்.

அப்போது, மதுபான விடுதி ஒன்றின் முன் அவர் சில கொள்ளையர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அந்த பயங்கர தாக்குதலில், Benஉடைய மண்டை ஓடு பல இடங்களில் உடைந்து, அவரது மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டது.

அவர் உயிரிழக்கக்கூடும் என மருத்துவர்கள் கருதியதால், உடனடியாக கனேடிய தூதரகத்துக்கு தகவலளிக்கப்பட்டு, அவர்கள் Benஉடைய குடும்பத்தினரை லண்டனுக்கு அழைத்துள்ளனர்.

Benஉடைய குடும்பத்தினரும், அவரது காதலியான கேத்தரினும், உடனடியாக லண்டன் விரைய, அவரது மண்டை ஓட்டை அகற்ற மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் அனுமதி கோரியுள்ளனர்.

 

அன்று துவக்கி, 4 ஆண்டுகள், மூன்று மாதங்களில், Benக்கு உடல் முழுவதிலுமாக 65 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அந்த காலகட்டம் முழுவதும் அவர்கள் அனைவரும் லண்டனிலேயேதான் தங்கியிருந்திருக்கிறார்கள். மார்ச் மாதம் 2ஆம் திகதிதான் Benம் குடும்பத்தினரும் கனடா திரும்பியிருக்கிறார்கள்.

பல சிக்கல்களை சந்தித்த, பிசியோதெரபி, பேச்சு வருவதற்கான சிகிச்சை என தொடர்ந்து பல சிகிச்சைகள் பெற்றுவரும் Benக்கு, இன்னும் சில வாரங்களில் 66ஆவது அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

Benக்கு சாவைக் கண்ணில் காட்டிய குற்றவாளிகளோ இதுவரை கைது செய்யப்படவில்லை. ஹீரோ போல தோற்றமளித்த Ben, இன்று தலையில் மண்டை ஓட்டுக்கு பதிலாக சதை பொருத்தப்பட்டு, முகம் மாறி, கழுத்தில் தசைகள் தொங்க ஆளே மாறிவிட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *