பிரித்தானியாவில் சிறுவர்களை காப்பாற்ற சென்று நீரில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 27 வயதுடைய தமிழ் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியில் அமைந்துள்ள Brecon Becons ஏரியில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்க ஏரியில் குதித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில் சுமார் 7 மணியளவில் நீருக்கடியில் செயற்படும் கமெராவினால் இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இளைஞரின் மறைவை அடுத்து அவர் செயல்பட்டு வந்த Blue Lion’s Badminton அணி நிர்வாகம் அஞ்சலி செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *