தினபதி மற்றும் வீரகேசரி பத்திரிகைகளின் சிரேஷ்ட பத்திரிகையாளரும் பிரபல அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியும் சிரேஷ்ட சட்டத்தரனியும் என்.கே.பிள்ளை அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியுமானவரும் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் பழைய மாணவரும் இக்கல்லூரியின் அபிவிருத்தி சங்கத்தின் முன்னாள் செயலாளருமான அமரர் கண.சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் விண்ணக வாழ்வின் 16 வது நினைவேந்தல் 26.08.2023 சனிக்கிழமையாகும்.
இவர் ஒரு பத்திரிகையாளராக சட்டத்தத்தரனியாக பன்முகப் பரிமானங்களை வெளிப்படுத்தியவர். புத்திரிகைத் துறையில் எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் வழிகாட்டலிலே தன்னை செழுமைப் படுத்திக் கொண்டவர்.
வீரகேசரியின் பழம்பெரும் பத்திரிகையாளரான சிவப்பிரகாசம் ஈ டேவிட்ராஜூ . நடராஜா ஆகியோரின் வழிகாட்டலில் அமரர் சுபாஷ் தன்னை மேலும் மெருகூட்டிக் கொண்டவர்
1985 ஆம் ஆண்டு பாரதரத்னா இந்திரா காந்தி நூலினையும் 1987 அல் அணிசேரா சம்பந்தமான நூலினையும் 1988 இல் சாம்பல் மேட்டில் பூத்த சாதனை அலைகள் என்ற நூல்களை வெளியிட்டு இருந்தார்.
இவர் வெளியீடு செய்த மூன்று நூல்களுமே அன்றைய சமகால அரசியலில் தாக்கத்தை எற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அணிசேரா இயக்கம் பற்றிய ஆழமான அரசியல் விடயங்களையும் தனது நூலில் குறிப்பிடத் தவறவில்லை. தமிழில் இவர் வெளியிட்டிருந்த நூல் தமிழ் அரசியல் கற்கை மாணவர்களுக்கு பெரிதும் உதவியது என பலராலும் போற்றப்பட்டவர்.
வீரகேசரியில் பணியாற்றியபோதே இவர் மேலே குறிப்பிடப்பட்ட மூன்று நூல்களையும் வெளியீடு செய்தமையும் குறிப்பிடத்தக்கது. சாம்பல் மேட்டில் பூத்த சாதனை அலைகள் என்ற நூலுக்கு ஜப்பானிய வெளிநாட்டு பத்திரிகை மன்றத்தில் புலமைப்பரிசும் பெற்று 1988 ஆம் ஆண்டு செப்படம்பர் மாதம் ஜப்பானுக்கு சென்றிருந்தார்.
1983 ஆடி இனக்கலவரம் வேளையில் சில தினங்கள் வீரகேசரி பத்திரிகை வெளிவராமலே நின்றது. அந்தநேரம் மீண்டும் தொடர்ச்சியாக வெளிக்கொணர்வில் அளப்பரிய பணியாற்றிவர்
இவ்வாறான ஒரு சிறந்த பகழ்பூத்த பத்திரியாளரை இந்hளில் நினைவு கூறப்பட வேண்டியது ஒன்றாகும்.
(வாஸ் கூஞ்ஞ)