மராட்டிய மாநிலத்தின் புனே-சோலாபூர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் சோலாபூரிலிருந்து புனே நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ், புனேவின் யாவத் கிராமம் அருகே நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *