தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று நள்ளிரவு வெளியாகின.

www.doenets.lk, www.results.exams.gov.lk ஆகிய இணைய தளங்களுக்குள் பிரவேசித்து பெற்றுக்கொள்ள முடியும் என பரீமட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த முறை புலமை பரிசில் பரீட்சைக்கு 334,805 பேர்p விண்ணப்பித்திருந்தனர்.

எனினும் 329, 668 பேர் பரீட்சைக்கு தோற்றினர்.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய கொழும்பு, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருணாகல்; மற்றும் கேகாலை மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் 153 ஆகும்.

அதேபோல் ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளி 150 ஆகும்.

அம்பாறை, புத்தளம் , அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை மொணராகலை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 148 என பரீமட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நுவரெலியா, திருகோணமலை மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளி 147 ஆகும்.

வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு குறைந்தபட்சம் 145 வெட்டுப்புள்ளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவர் ஒருவர் தனது மதிப்பெண்களை மறுபரினை செய்ய விரும்பினால், பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்யலாம் என் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *