பூனாகலை – கபரகலை தோட்டத்தில் மண்சரிவு

Share

Share

Share

Share

பண்டாரவளை – பூனாகலை – கபரகலை தோட்டத்தில் நேற்று இரவு மண்சரிவொன்று ஏற்பட்டது.

அங்குள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட  மண்சரிவில்,இதுவரையில் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அங்கு தொடர்ந்தும் தேடுதல் பணிகள் தொடர்வதாக எமது செய்தியாளர் கூறினார்.

இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள்; பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து பிரதேச மக்கள் மற்றும் ஹல்துமுல்ல பிரதேச சபை தலைவர் அசோக்குமார் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக வைத்திய சாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், மீட்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்காலிகமாக பாதுகாப்பான முறையில் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உடனடியாக இங்கு மீட்பு பணிகளை முன்னெடுக்கவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தலைவருடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதேவேளை, பதுளை, கேகாலை மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிப்போரை அவதானத்துடன் செயற்படுமாறும் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது.

அதற்கமைய, மண்சரிவு, கற்பாறை சரிதல், மண்மேடு சரிதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் உள்ளிட்டவை தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு