தேர்தலை பின் போடும் சதித்திட்டத்தில் யார் செயல்படுகிறார்கள் என்ற சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ம.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்றைய ஜனாதிபதியின் உரையை தொடர்ந்து உரையாற்றும் போதே உதயகுமார் இதனை கூறியுள்ளார்.

ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘பொருளாதாரம் மேம்ப்பட வேண்டுமாயின் முதலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்

பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற சந்தேகம் இருந்தது அதனை ஜனாதிபதி செய்து முடித்துவிட்டார்.

இன்று பெருந்தோட்ட தொழிலாளர்களின் பொருளாதார நிலையோ படும் மோசமாக உள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை, வாழ்க்கை தரத்தை தரம் உயர்த்தி இருக்கிறிர்களா? அவர்களின் வருமானத்தை, சம்பளத்தை உயர்த்தி இருக்கிறிர்களா? இல்லையே அவர்களின் உழைப்பு வேண்டும் ஆனால், அவர்களின் உயர்வில் அக்கறை இல்லை.

ஆகவே, தற்போது நாட்டில் இருப்பது மக்களின் ஆதரவை இழந்த அரசு உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு பணமில்லை என்பதல்லதேர்தலை எதிர்க்கொள்ள அரசாங்கத்திற்கு துணிவில்லை. தேர்தலுக்கு பணம் தான் பிரச்சினை என்றால் அதனை திரட்ட நிறையவே வழி இருக்கிறது.

தற்போதைய ஜனாதிபதி சர்வதேசத்தில் பலம்வாய்ந்த தலைவர் என்று பீத்திக்கொள்கிறார்கள்! அவரால் தேர்தலுக்கு பணம் திரட்டிக் கொடுக்க முடியாதா? ஆகவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் வாக்குரிமையும் நாட்டின் ஜனநாயகமும் பாதுகாக்கப்பட வேண்டும்”என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *