பெரு நாட்டில் இடைவிடாது பெய்துவரும் தொடர் கனமழை – பெருமளவில் பாதிப்பு

Share

Share

Share

Share

பெரு நாட்டில் இடைவிடாது பெய்துவரும் தொடர் கனமழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு, தெற்கு பெருவில் உள்ள பல கிராமங்களுக்குள் மண், நீர் மற்றும் பாறைகள் அடித்துச் செல்லப்பட்டன.

பாலங்கள், பாசன கால்வாய்கள் மற்றும் சாலைகளும் இந்த நிலச்சரிவால் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவின் போது சிலர் வேனில் ஏறி தப்பிக்க முயன்றனர், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த வேன் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

பெரு நாட்டின் மிஸ்கி என்ற இடத்தில் 36 உடல்கள் மீட்கப்பட்டதாக மரியானோ நிக்கோலாஸ் வால்கார்செல் நகராட்சியின் சிவில் பாதுகாப்பு அதிகாரி வில்சன் குட்டரெஸ் கூறினார்.

அரேகிபாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தோர் அண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு
கலிபோர்னியாவில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஸ்பெயினில் ஏற்பட்ட தீ விபத்தில் 13...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின்...
மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது...
பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர்...
“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட...