நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 400 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.
இதேவேளை, ஏனைய வகை எரிபொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைவாக, லங்கா ஐஓசி ஒக்டேன் 92 பெற்றோல் விலையும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது