டொரன்டோ நகரின் பொது போக்குவரத்து சேவைகளுக்கு வழங்கப்பட்டு வந்த மேலதிக பொலிஸ் பாதுகாப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரம் முழுவதிலும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் கடந்த ஜனவரி மாதம் முதல் மேலதிகமாக போலீஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அண்மைய நாட்களாக கனடிய பொது போக்குவரத்து கட்டமைப்புகளில் இடம்பெற்று வந்த தாக்குதல் சம்பவங்கள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடரூந்துகள் என்பனவற்றில் போலீஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.

இவ்வாறு மேலதிக பாதுகாப்பு வழங்குவதற்காக மாதாந்தம் சுமார் 1.5 மில்லியன் டாலர்களை சில விட நேரிட்டுள்ளதாக கனடிய போலீசார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் விசேட போலீஸ் ரோந்து சேவையும் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பொது போக்குவரத்து சேவைகளில் தொடர்ந்தும் இடைக்கிடை தாக்குதல் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *