இலங்கையின் பொருளாதாரம்  2023 மற்றும் அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் 7.8% வீழ்ச்சியடைந்த பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டில் 4.3% ஆக சுருங்கும் எனவும், கேள்வி தொடர்ந்து குறைந்து வருவதால், வேலை இழப்புகள், வருமான இழப்புகள் தீவிரமடைந்து, விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக உற்பத்தி மோசமாக பாதிப்படையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வெளிநாட்டு, சில உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

ஒரு வலுவான மற்றும் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தத் திட்டம், நீண்டகால நெருக்கடியைத் தவிர்க்கவும் தற்போதைய பொருளாதார சிக்கல்களின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யவும் முக்கியமானது என்று அது மேலும் கூறியுள்ளது.

பல கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மூலம் நெருக்கடியை சமாளிக்க அரசியல் தலைமை மற்றும் இலங்கை குடிமக்களின் உறுதியான தீர்மானம் தேவை என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பின் அர்த்தமுள்ள விளைவுகளும் சீர்திருத்த வேகத்தைத் தக்கவைக்கவும், விரைவான மற்றும் வலுவான பொருளாதார மீட்சிக்கான பாதையை பட்டியலிடவும் சர்வதேச பங்காளிகளின் கூட்டு ஆதரவும் தேவைப்படும் என்று அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் வறுமையைக் குறைக்க சிறந்த இலக்குடன் கூடிய சமூக உதவியும் உற்பத்தித் துறைகளின் மீட்சியும் வருமான அதிகரிப்பும்  தேவைப்படும் என்று உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நெருக்கடியை இலங்கை வலுவானதும் நெகிழ்ச்சியானதுமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை வலிமையானதும் மிகவும் நெகிழ்ச்சியானதுமான பொருளாதாரத்தை நோக்கி பயணிக்கும் நிலையில்,  ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாக்க உயர் வருமானம் பெறும் குழுக்கள் அதிக சுமைகளை தாங்கிக்கொள்ள நேரிடும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *