போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்ற பஸ் ரெயில் மீது மோதி விபத்து

Share

Share

Share

Share

நைஜீரிய நகரங்களில் பொதுவாக போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றப்படாமல் விபத்துகள் அதிகமாக நடைபெறுகின்றன.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நேற்று ரெயில் மீது பஸ் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

முன்னதாக அரசு ஊழியர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற பஸ் ஒன்று லாகோசில் உள்ள இகேஜா பகுதியில் இன்ட்ரா-சிட்டி ரெயில் மீது மோதியது.

இந்த விபத்தில் பேருந்தில் சென்ற 6 பேர் உயிரிழந்தனர். 84 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெயிலில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

பஸ் டிரைவர் போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோசில், விபத்துக்களைத் தடுக்க சமீப ஆண்டுகளில் கடுமையான அபராதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது கடுமையான பிரச்சனையாக உள்ளது.

ரயில் விபத்து – 233 பேர்...
இன்று பொசன் பௌர்ணமி தினம்
தமிழகம் சென்ற சரக்கு ரயில் ஒடிசாவில்...
ஆப்கானிஸ்தான் வெற்றி – மதீஷ ஏமாற்றினார்
காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச பல்கலைக்கழகம்...
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...
பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமரா
வங்குரோத்து அடையும் நிலையிலிருந்து விடுபட்ட அமெரிக்கா
ஏறி பிரித்தானியா செல்ல முயற்சித்த அகதி...
பாடசாலையொன்றின் கழிப்பறையில் இரகசிய கமரா
ஜோர்தான் பட்டத்து இளவரசர் சவுதி அரேபிய...