இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான அஹதாபாத்தில் நேற்று முடிவடைந்த நான்காவது டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்துள்ளது.

என்றாலும் நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 2:1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியது.

இதன்படி 4 ஆவது முறையாக போர்டர் – கவாஸ்கர் கிண்ணத்தை இந்தியா வென்றமை குறிப்பிடதக்கது.

இந்த தொடரில் 25 விக்கெட் மற்றும் 86 ரன் எடுத்த அஸ்வின், 22 விக்கெட் மற்றும் 135 ரன் எடுத்த ஜடேஜா சகலதுறை வீரார்களாக தெரிவாகினர்.

கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

உள்நாட்டில் இந்தியா தொடர்ச்சியாக வென்ற 16 ஆவது டெஸ்ட் தொடர் இதுவாகும்.

அதேபோல, சவால்மிக்க அணிகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியாக பெற்ற 4 ஆவது டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும்.

2017, 2018-19, 2020-21 ஆகிய ஆண்டுகளிலும் இந்தியா இதே போன்று 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்தது.

இதில் 2 முறை அவுஸ்திரேலிய மண்ணில் படைத்த வரலாற்று சாதனையும் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *