மக்கள் வாழும் பகுதிகளில் குறிப்பாக சூழலுக்கு ஆபத்தான பகுதிகளில் கிரவள் மணல் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும் , அத்துடன் அகழும்  உரிமம் பெற்றவர்களூக்கு மக்கள் நடமாட்ட இல்லா பகுதிகளில் அகழ வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கிழக்கு மாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறுகிறார்.

மட்டக்களப்பு சோதையன்கட்டுவில் இன்று இடம்பெற்ற கிரவள் அகழ்வு பிரச்சினை குறித்து ஆளுநரின் கருத்தை கேட்ட போதே இதனை கூறினார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு – சோதையன்கட்டு பகுதியில்  கிரவள் அகழ்வு நடந்து கொண்டிருந்தபோது இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் உள்ளிட்டோர் அந்த பகுதிக்கு சென்று கிரவள் அகழ்வை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

அந்நேரம் கிரவள் அகழ்வில் ஈடுப்பட்டோருக்கும் இராஜங்க அமைச்சருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டது.

அதேவேளை கிரவள் அகழ்வதற்கான உரிமை பத்திரம் மத்திய அரசாலே வழங்கப்படுகிறது. இதனால் பல நடை முறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது குறித்து தாம் ஆலோசனை வழங்கியதாவும் ஆளுநர் எமக்கு கூறினார்.

மேலும் வீடுகள் கட்டங்கள் நிர்மானிக்க கிரவள் மணல் அவசியம் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதனால் மக்கள் வாழாத வனப்பகுதியில் இந்த அகழ்வை மேற்கொள்ள முடியும் என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் எமக்கு தெரிவித்தார்.

 

சிரேஷ்ட ஊடகவியலாளரான சஷி புண்ணிய மூர்த்தி இந்த கிரவள் அகழ்வு குறித்து முகநூலில் பதிவொன்றை விடுத்திருந்தார் 

சஷி புண்ணியமூர்த்தி - சிரேஷ்ட ஊடகவியலாளர்

 

அதில் 20 இலட்சத்துக்கு மேல் பணம் கொடுத்து கிரவள்உரிமம் எடுத்தவர் தனது பக்கத்து நியாயத்தை ஊடகங்கள் மூலமாக தெரிவித்து இருக்கலாம் ஆனால் அவர் விரும்பவில்லை.

ஆனால் மட்டக்களப்பில் உள்ள வரலாறுகள் பாதுகாக்கப்பட வேண்டும் குறித்த சோதையன்கட்டு கிரவள் மலையானது ஒரு அரசனால் சோம்பேறிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.

ஆனால் அவ்விடத்தில் சென்று பார்த்தபோது அதிகளவான இடங்கள் உடைக்கப்பட்டு கிரவள் அகழப்பட்டு மலை தரைமட்டமாக காணப்படுகின்றது.

இந்த உரிமம் எடுப்பவர்கள் சரியான இடத்தை தேர்ந்தெடுத்து அடிமட்ட கிராம மக்களுடன் பேசி தங்களது அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டால் இதுபோன்ற சம்பவங்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை.

தொள்பொருள் என்ற போர்வையில் ஒரு பக்கம் சிங்கள குடியேற்றம் கனிம அகழ்வு என்ற போர்வையில் வரலாறுகள் சிதைக்கப்படுகின்ற காணாமல் ஆக்கப்படுகின்ற நிலைமைதான் இப்போது காணப்படுகின்றது .

ஒரு கியூப் மணல் 50,000 ஆயிரம் 60,000 ஆயிரம் போகுது என்று கவலைப்படுபவர்கள் மட்டக்களப்புக்கு தேவையான மணலை மட்டும் அகழ்ந்தெடுத்தால் இவ்வாரண பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.

இது பலருக்கு கடுப்பாகவும் இருக்கும் பலருக்கு நல்ல விடயமாகவும் இருக்கும் யார் யார் சமூகத்தில் தங்களை நல்லவர்கள் என்று காட்டிக் கொள்ள முற்படுகிறார்களோ அவர்களே இதற்குப் பின்னால் இருக்கின்றார்கள் என்பதை நிதர்சனமான உண்மை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *