மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான உணவு விநியோகம் மீண்டும் ஆரம்பமாகிறது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் உடனடியான நடவடிக்கை காரணமாக மீண்டும் தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக இன்று முதல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத காரணத்தினால் இந்த உணவு வழங்கல் நிறுத்தப்பட்டத . உடனடியாக இது குறித்து விசாரணை செய்யுமாறு ஆளுநர் அறிவித்துள்ளார்.

மேலும் வறுமையானால் தூர பிரதேசங்களில் இருந்து வந்து வார்டுகளில் தங்கியிருக்கும் நோயாளிகள் பட்டினியிலால் அவதியுறுவதை தாம் ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை என்றும் உணவு வழங்கலை உடனடியாக மேற்கொள்ளுமாறு தாம் உத்தரவு பிறப்பித்தாக ஆளுநர் செந்தில் தொண்டமான் எமக்கு கூறினார்.

இந்த துரித நடவடிக்கையை ஐந்து மணித்தியாலயத்தில் மேற்கொண்டதாக மேலும் சொன்னார்.

இதேலேளை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்குவதற்காக அதிக கட்டணத்தின் கீழ் விலை மனு கோரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதனால் குறித்த விநியோகஸ்தர்களுக்கான கட்டணத்தை செலுத்த முடியாது போனதால், உணவு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *