(வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் ஒரு சரியான தலைமைத்துவம் இல்லாமையாலேயே இன்று மன்னார் தொடர்ந்து பின் தங்கி காணப்படுவதுடன் பல திட்டங்கள் தோல்வியிலும் அழிந்தும் செல்லுகின்றன என மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

-உண்மை மற்றும் நல்லிணக்க சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட மன்னார் மாவட்டத்தில் ஐந்து கிராமங்களின் பிரதிநிதிகளுடனும் மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபை உறுப்பனர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் மற்றும் ஐஎஸ்ரி திட்ட முகாமையாளர் எஸ்.ஜனாத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதன் கிழமை (18) மன்னார் பிரஜைகள் குழு அலுவலக மண்டபத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் இங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

நாம் எந்த திட்டத்தையும் முன்னெடுக்கப்படும் போது அதற்கான எல்லை நிர்ணயக்கப்பட வேண்டும். அது இல்லாமல் நாம் எதிலும் கால் பதிப்பது சிறந்தது ஒன்றல்ல.

ஒரு திட்டத்தின் எல்லையை நாம் நிர்ணயித்து பயணிக்கின்றபோது என்ன பயன்களைப் பெறாம் அல்லது கொடுக்கலாம் என்ற ஒரு தெளிவு ஏற்படும்.

இது இல்லாவிடில் நாம் தோல்விகளையே சந்திக்க நேரிடும். மன்னாரைப் பொறுத்தமட்டில் பல திட்டங்கள் தோல்விகளையே சந்சித்து உள்ளன. அத்துடன் அடையாளம் இல்லாத நிலையும் உருவாகி இருக்கின்றது.

ஒரு திட்டத்தை முன்னெடுக்கப்படும் போது அடிமட்டத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும். இன்று இந்த அமைப்பானது ஓரிரு கிராமங்களை தெரிவு செய்து அங்கு குழுக்களை உருவாக்கி அங்கு ஒரு சில திட்டங்களை முன்னெடுக்கின்றது.

ஆகவே இந்த குழுக்கள் அங்குள்ள சமூகத்தின் மத்தியில் நல்ல விழப்பணர்வை முன்னெடுத்து செயல்பட வேண்டும்.

நாம் ஒரு திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது வருமானம் அல்லது இதற்கான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று நாம் இதை நிறுத்தினோம் என்றால் இதனால் எமக்கு மட்டும் தோல்வி அல்ல. அது சமூதாயத்தையும் மிகவும் பாதிக்கும்.

நாம் ஒரு அமைப்பிலிருந்து கொண்டு வரப்பட்ட திட்டம் தோல்வி என்றால் ஏனைய அமைப்புக்கள் அவ்விடத்துக்கு வருவதில் பின்வாங்கும்.

ஆகவேதான் நாம் ஒன்றை தொடங்குமுன் சரியான திட்டத்தை வகுத்துக்கொள்ள வேண்டும். அதை இறுதிவரை செய்து முடிக்க வேண்டும்.

சில சமூகத்தின் மத்தியில் ஏற்றத் தாழ்வு மற்றும் புரிந்து கொள்ளாத தன்மைகள் ஏற்படும். இதை நாம் முதலில் சரி செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து மன்னாரில் சரியான ஒரு தலைமைத்துவம் கிடையாது. எமது மண்ணில் துணிந்து குரல் கொடுக்க இன்னும் சரியான தலைமைத்துவம் இங்கு கிடையாது. ஏனென்றால் இங்குள்ள அடிமட்டங்கள் அசைக்கப்படவில்லை.

இங்குள்ளவர்களால் எதையும் சாதிக்க முடியும். நாம் இன்னொரு சமூகத்துக்கு எதை விட்டுச் செல்லுகின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒரு முக்கியஸ்தர் என்னை சந்தித்தபோது கூறியது மன்னார் மாவட்டம் ஒரு பின்தங்கிய மாவட்டம். மன்னாரில் ஒரு சரியான தலைமைத்துவம் இல்லை.

மன்னார் மாவட்டத்தின் ஒரு சரியான வரைப்படம் கிடையாது. அரச காணி எது? மக்களுக்குரிய காணி எது? என்ற விபரம் ஒன்றும் மன்னாரில் இல்லை.

இதனால்தான் மன்னாருக்கு யாரும் வந்து எதையும் செய்துவிட்டு போகலாம் என்ற நிலைப்பாடு உண்டு. ஆகவேதான் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *